ஆப்கானிஸ்தான் பாக்ராம் விமானத் தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும், இதை தலிபான் அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றால் ‘மோசமான விஷயங்கள் நடக்கும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளதாவது,”ஆப்கானிஸ்தான், பக்ராம் விமான தளத்தை அதை கட்டியவர்களிடம், அதாவது அமெரிக்காவிடம் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கப் போகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நடைபெறும் 23 நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் சட்டவிரோத மருந்துகள் மற்றும் அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை உற்பத்தி செய்து கடத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் கூறினார். கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதிபர் […]

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 4) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா (கேபி) மாகாணங்களின் பல நகரங்களில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. பெஷாவர், மன்சேரா, ஹங்கு, அபோட்டாபாத், ஸ்வாட், அட்டோக் மற்றும் மலாகண்ட் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது, இதனால் குடியிருப்பாளர்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். […]

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தில் 2,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர். இந்த பேரழிவில் கிட்டத்தட்ட 4,000 பேர் காயமடைந்துள்ளனர், பெரும்பாலான உயிரிழப்புகள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான குனார் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. அரசாங்க துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத், எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் இறப்பு எண்ணிக்கை […]

நேற்றிரவு ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குனார் மாகாணத்தில் 6.0 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு (1917 GMT) கிட்டத்தட்ட 200,000 மக்கள் வசிக்கும் ஜலாலாபாத் நகரத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கில் சுமார் 27 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து குறைந்தது மூன்று பின்னதிர்வுகள் ஏற்பட்டது.. கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் […]

மேற்கு ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஈரானில் இருந்து இருந்து புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக சென்ற பேருந்து, லாரி மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த […]

இன்றைய நகர வாழ்க்கையில் திருமணத்திற்கு முன் உடல் உறவு கொள்வது மிகவும் சாதாரணமானது. ஆனால் சில நாடுகளில் இந்த வகையான கலாச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. இந்தோனேசியா: 2022 ஆம் ஆண்டு இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தின்படி, திருமணத்திற்கு முன்பு ஒருவருடன் உடல் உறவு கொள்வது இங்கு குற்றமாகக் கருதப்படுகிறது. அதே போல் திருமணம் தாண்டிய உறவும் பெரும் குற்றமாக […]