2025 ஜூன் 12-ம் தேதி 250-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா விமான விபத்தில், விமானிகள் மீது எந்தவித குற்றச்சாட்டும் சுமத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெளிவாகக் கூறியுள்ளது. இந்த வழக்கில், விபத்தில் உயிரிழந்த விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை புஷ்கராஜ் சபர்வால் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அவர், இந்த விபத்துக்கான விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் நடக்க வேண்டும் என்று கோரிக்கை […]

விமான கேபின்களுக்குள் புகை மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானப் பயணத்தின் போது பவர் பேங்குகளை எடுத்துச் செல்வது குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியாக உள்ளது.. இது குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசித்து வருகிறது. விமானப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிகளை இறுதி செய்வதற்கு முன், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உலகளாவிய விமான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து […]

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் பைலட்-இன்-கமாண்டரான கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை, இந்த துயரச் சம்பவம் குறித்து சுயாதீனமான, நீதித்துறை மேற்பார்வையிடப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அக்டோபர் 10 ஆம் தேதி இந்திய விமானிகள் கூட்டமைப்புடன் (FIP) கூட்டாக தாக்கல் […]

பெங்களூருவிலிருந்து வாரணாசிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணி ஒருவர், விமானி அறைக் கதவை வலுக்கட்டாயமாகத் திறக்க முயன்றதால், பாதுகாப்பு பயம் ஏற்பட்டது. விமானக் கடத்தல் முயற்சி நடந்ததாக விமானி சந்தேகித்து உடனடியாக பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தகவல் அளித்தார். விமானம் வாரணாசி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கும் வரை விமானக் குழு உறுப்பினர்கள் அந்த நபரை தடுத்து வைத்தனர்.. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) பணியாளர்கள் அந்த […]

இன்று மும்பையிலிருந்து ஜோத்பூருக்குச் சென்ற ஏர் இந்தியா AI645 விமானத்தில், செயல்பாட்டுக் கோளாறு காரணமாக பாதியிலேயே திரும்பியது.. விமான குழுவினர், நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) பின்பற்றி, விமானம் புறப்படுவதை நிறுத்த முடிவு செய்து, விமானத்தை பாதுகாப்பாக மீண்டும் விமான நிலையம் கொண்டு வந்தனர். விமானப் பயணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா இடையூறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், பயணிகள் ஜோத்பூரை அடைவதை உறுதி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக […]

கடந்த ஜூன் 12ம் தேதி AI171 விமானம் விபத்துக்குள்ளான பிறகு செயல்படுத்தப்பட்ட ‘பாதுகாப்பு இடைநிறுத்தத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஏர் இந்தியா தனது சர்வதேச விமான சேவைகளை ஓரளவு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு இடைநிறுத்தத்தின் போது, முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏர் இந்தியா தனது போயிங் 787 விமானங்களை கூடுதல் சோதனைகளை மேற்கொண்டது. மேலும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு வழியாக விமான வழித்தடங்கள் […]