போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டதில் அஜித் உயிரிழப்பு” சிவகங்கை மடப்புரத்தில் இளைஞர் அஜித் குமார் உயிரிழப்பு குறித்து போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தகவல். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் […]

அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தலை, கழுத்து, தொடை என பல பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோவிலில் 28 வயதான அஜித் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும் தனது […]