ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 5 பேர், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகை, புத்தளம் கடற்பரப்பில் நேற்று காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகிலிருந்த […]

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதை நாட்டுடைமையாக்கும் வேலைகளையும் இலங்கை […]

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது. சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக […]

விவாகரத்து ஆகி தனியாக வசிக்கும் ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகை பணத்தை பறித்து சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்த வீரதுர்கா நீலிமா (26) என்பவர், திருமணம் முடிந்த பின்னர் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் ஆண்கள் மீது பரிதாபம் காட்டும் போல் பழகி, நெருக்கம் காண்பித்து திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன் வலையின் […]

காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண், திடீரென கணவரும் மாமியாரும் போலீசாருடன் வந்ததை பார்த்ததும் ஹோட்டல் சுவரில் இருந்து குதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் பராத் பகுதியில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் அந்த பெண் தனது கள்ள காதலனுடன் தங்கியிருந்தார் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெண்ணின் கணவர் குடும்பம் போலீசாருடன் ஹோட்டல் அறைக்கு வந்தனர். […]

திருத்தணி சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஏ.டி.ஜி.பி ஜெயராமனைக் கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏ.டி.ஜி.பி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டார். அவரை திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தொடர்ந்து […]