தமிழ்நாட்டின் இயற்கை மற்றும் கனிம வளங்களை முறைகேடாக பினாமி பெயர்களில் குவாரி நடத்திச் சூறையாடுபவர்கள் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்றும், அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் எச்சரித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், அரசுக்கு சொந்தமான வளங்கள் பல அரசியல்வாதிகளின் பிடியில் உள்ளதாகவும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இத்தகைய குவாரி தொழில்களில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார். […]

