பினாமி பெயரில் குவாரிகள்..!! அமைச்சர் ஆதவ் சொன்ன அந்த வார்த்தை..!! கொந்தளித்த திமுக MLA-க்கள்..!!

Aadhav Arjuna 2026

தமிழ்நாட்டின் இயற்கை மற்றும் கனிம வளங்களை முறைகேடாக பினாமி பெயர்களில் குவாரி நடத்திச் சூறையாடுபவர்கள் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்றும், அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் எச்சரித்துள்ளார்.


சட்டப்பேரவையில் பேசிய அவர், அரசுக்கு சொந்தமான வளங்கள் பல அரசியல்வாதிகளின் பிடியில் உள்ளதாகவும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இத்தகைய குவாரி தொழில்களில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார். டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் மணல் குவாரிகளின் பின்னணியில் பினாமியாக செயல்படும் நபர்கள் மற்றும் அவர்களின் அரசியல் செல்வாக்கு குறித்து கேள்வி எழுப்பிய அவர், முறைகேடாக ஈட்டிய பணத்தின் மூலம் குடும்பத்தினர் பெயரில் கல்லூரிகளை நிறுவிவிட்டு, வெளியில் எதுவுமே இல்லாதது போல் நாடகமாடுவதாக குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பல மடங்கு ஆழத்திற்குச் சட்டவிரோதமாகக் கற்களையும் கனிமங்களையும் வெட்டி எடுக்கும் நபர்கள் மீது முதலமைச்சர் விரைவில் அபராதம் விதிப்பதுடன் கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் என தெரிவித்தார். மேலும், பினாமிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை வளங்களை மீட்டு மக்கள் சொத்தாக மாற்ற வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபடுவோரின் உண்மை முகத்தை மக்கள் மன்றத்தில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினாலே போதும், மதுரை முன்னாள் அமைச்சர் டெபாசிட் இழந்ததைப் போல மக்கள் அவர்களுக்குத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Read More : நிலத்தை விற்று கள்ளக்காதலனுடன் ஓடிப்போன மனைவி..!! கையும் களவுமாக பிடித்த கணவன்..!! கடைசியில் திடுக்கிடும் சம்பவம்..!!

Next Post

திருமண தடைகள், கண் திருஷ்டிகள்..!! குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்..!!

Wed Aug 26 , 2026
ஒரு மனிதனின் வாழ்வு மேன்மையடையவும் குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கவும் குலதெய்வத்தின் அருள் மிகவும் இன்றியமையாதது என ஆன்மிக சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி குலதெய்வத்தின் பரிபூரண ஆசியைப் பெறுவதற்குச் சில குறிப்பிட்ட எளிய படையல் வழிபாடுகள் அளப்பரிய நன்மைகளைத் தரும் என ஆன்மிக வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர். அதன்படி, குலதெய்வத்திற்கு தேங்காய் வைத்து வழிபட எடுக்கும் புதிய முயற்சிகளில் உள்ள தடைகள் அகலும்; சர்க்கரைப் பொங்கல் படைக்கப் பணவரவு […]
God 2026

You May Like