சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிஉருவாக உள்ளதைத் தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்குச் செல்வது தொடர்பாக மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் நாளை இரவுக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நவம்பர் 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வானிலை அமைப்பு அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெறக்கூடும் என்றும், இதனால் ஏற்கனவே கடலுக்குள் மீன்பிடிக்கச் […]

