வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி..! மீனவர்களுக்கு மீன்வளத்துறை முக்கிய எச்சரிக்கை..!

fishermanalert

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிஉருவாக உள்ளதைத் தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்குச் செல்வது தொடர்பாக மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் நாளை இரவுக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் நவம்பர் 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வானிலை அமைப்பு அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெறக்கூடும் என்றும், இதனால் ஏற்கனவே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் நவம்பர் 12ஆம் தேதி இரவுக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கிழக்குக் கடற்பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ள அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளும் நவம்பர் 12ஆம் தேதி இரவுக்குள் பாதுகாப்பாக கரை திரும்ப வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படாது என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. எனவே, தினசரி கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் நாட்டுப்படகுகள் உட்பட அனைத்து வகையான படகுகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கரை திரும்ப வேண்டும்.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளையும், மீன்வளத்துறை வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் மீனவர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Also Read:இனிப்புகளில் மின்னுவது வெள்ளியா, அலுமினியமா? பண்டிகைக் காலத்தில் மக்களே உஷார்!

maha

Next Post

ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: அன்பில் மகேஷ் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த டிரைவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்!

Wed Nov 11 , 2026
சென்னை: முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.400 கோடி லஞ்ச வழக்கில், தலைமறைவாக இருந்த டிரைவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் ரூ.400 கோடி வரை பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் […]
anbil mahesh

You May Like