fbpx

Pahalgam attack: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பரிதாபமாக கொல்லப்பட்ட 28 பேரில் புலனாய்வுப் பணியகத்தின் (IB) பிரிவு அதிகாரியான மணிஷ் ரஞ்சன் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிடிஐ செய்தி ஆதாரங்களின்படி, ஹைதராபாத்தில் உள்ள ஐபி அலுவலகத்தில் பணியாற்றி வந்த ரஞ்சன், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விடுப்பு பயண சலுகையில் …

பீகார் மாநிலத்தில் சமீபத்திய இடியுடன் கூடிய கனமழை மற்றும் மின்னல் தாக்குதல் பேரழிவாக மாறியுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களில் மொத்த உயிரிழப்புகள் 80 ஆக உயர்ந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய இயற்கை பேரிடர்களால் ஆண்டுதோறும் சுமார் 250 பேர் உயிரிழக்கின்றனர்.

இந்தாண்டு பிப்ரவரியில் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட …

உடல் நலக்குறைவால் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் புதன்கிழமை சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, உடல்நிலை மோசமடைந்ததால், பீகாரின் பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

76 …

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராயின் மருமகன் சகோதருடன் ஏற்பட்ட தகறாரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் பாகல்பூரில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயின் இரண்டு மருமகன்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார், இரண்டாவது மருமகன் காயமடைந்து, அவர் பாகல்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். …

மகா கும்பமேளா குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தவர்களை பீகார் ஒருபோதும் மன்னிக்காது என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை பீகார் மாநிலம் பாகல்பூரில் நேற்று விடுவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பல வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். புனித மகா …

19 வது தவணை எப்பொழுது வழங்கப்படும் என விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் கீழ் வரவிருக்கும் 19 வது தவணை வெளியீடு குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமரின் உழவர் நலத்திட்டம், 2019 பிப்ரவரி 24 …

Bihar: பீகாரில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதுபோல் வந்து துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் பைஜ்நாத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரி பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கிற்கு 2 பைக்குகளில் …

Murder: பீகாரில் ஒரே இளைஞருடன் தாயும், மகளும் தகாத உறவில் இருந்ததை கண்டித்த கணவரை, 3 பேரும் சேர்ந்து கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் பாரி ராமசி கிராமத்தை சேர்ந்தவர் கைலு தாஸ் (35). இவரது மனைவி சரிதா தேவி. இவர்களுக்கு ஜூலி என்ற …

Spurious liquor: பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த மதுவை அருந்திய 7 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதால், மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

இந்தியாவின் பல மாநிலங்களிலும் மதுவிற்பனைக்கு அனுமதி இருந்தாலும் ஒடுக்கப்பட்ட சாமானிய மக்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் கள்ளச்சாராயத்தை நம்பி குடித்து கொத்து கொத்தாக செத்து மடிகிற துயரம் காலந்தோறும் நிகழ்கிறது. …

பீகார் மாநிலத்தில் பெகுர்சராய் மாவட்டத்தில் உள்ள ராஜவுராவில் வசிக்கும் சுதாகர் ராயின் மகனான அவ்னிஷ் குமார், ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், நேற்று அவர் பணிபுரியும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், ஆசிரியர் சென்ற வாகனத்தை வழிமறித்து அவ்னிஷை நோக்கி துப்பாக்கிகளை நீட்டினர். இதையடுத்து, அவரை அந்த கும்பல் …