தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மிகப்பெரிய அரசியலை முன்னெடுத்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அதற்காக பாஜகவிற்கு எதிரான பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும், அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த முயற்சியில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் ஈடுபட்டு வருவதால் அவருடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கைகோர்த்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பீஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுக் […]

பீகார் தலைநகர் பாட்னாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தில் செல்ல உள்ளார். வரும்‌ 2024 ஆம்‌ ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்‌ நடைபெற உள்ள நிலையில்‌ மீண்டும்‌ ஆட்சியை கைப்பற்ற பாஜக அனைத்து திட்டங்களையும் தீட்டி வருகிறது. பாஜகவை எதிர்க்க வலுவான எதிர் அணியை உருவாக்கும்‌ நோக்கில்‌ எதிர்க்கட்சிகள்‌ ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக பேசி வருகின்றனர்‌. இதுதொடர்பாக பிகார்‌ முதல்வர்‌ நிதிஷ்குமார்‌ பல்வேறு மாநில […]

பீகார் மாநிலத்தில் கட்டுப்பட்டு வந்த சுல்தாங்கஞ்ச் பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது. பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது. ககாரியா மற்றும் பாகல்பூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த 100 அடி நீளம் கொண்ட இந்த பாலம் இரண்டாவது முறையாக ஆற்றில் சரிந்து விழுந்தது. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கனவுத் திட்டமாக 1,750 கோடி ரூபாய் செலவில் […]

பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாயுக்கு பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை ஜந்தா பஜார் காவல் நிலையப் பகுதியில் உள்ள செந்துர்வா கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இது வெளிச்சத்திற்கு வந்ததாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர். உபாத்யாயின் இடது தொடையில் அடிபட்டு, பாட்னாவில் உள்ள ஒரு தனியார் […]

பிஹார் மாநிலத்தின் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தின் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று இரவு பார்பிகாவில் இருக்கின்ற பயிற்சி நிறுவனத்திலிருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பார்பிகா மெஹஸ் சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் ஆசிரியரை தடுத்து நிறுத்தி உள்ளனர். அதில் ஒருவர் ஆசிரியரின் தலைக்கவசத்தையாக செய்யும் மற்றொருவர் அவரை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இதில் சம்பவ […]

பீகார் மாநிலத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரது பிறப்புறுப்பில் களிமண்ணை அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமி தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சார்ந்த 26 வயது இளைஞர் […]

“செல்பி எடுக்கலாம் வா” என்று மனைவியை மலை உச்சிக்கு அழைத்து சென்று கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அதிர்ச்சியான சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தைச் சார்ந்தவர் ராஜ் ரஞ்சன் மிஸ்ரா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நிஷா குமாரி என்று பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரது மனைவி நிஷா குமாரி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் […]

மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கின்ற சூழ்நிலையில், அந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளை பல முன்னணி அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டனர். இத்தகைய நிலையில், பீகார் மாநிலத்தில் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பீகாரருக்கு பயணம் ஆனார். அங்கே நவாடா மாவட்டத்தின் ஹிசுவாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி […]

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்ற புது மாப்பிள்ளை உடலில் பல்வேறு பயங்கரமான வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாவட்டம் சீதாமார்க்கி நகரைச் சார்ந்தவர் சிந்து. இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிந்து திரும்ப வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்த […]

தற்போது இருக்கும் காலகட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிசிடிவி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரை திடீரென அப்பகுதிக்கு வரும் ஆண் ஒருவர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை இழுத்து முத்தம் கொடுக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள […]