கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எறிந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீடீரென தீப்பிடித்துள்ளது. தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்., அதற்குள் பஸ் 100% முழுவதுமாக எரிந்து நாசமானது. பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததா..? […]

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 1,035 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் 19, 20 தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் ஜூலை 18, 19 தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 705 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, […]

வார இறுதிநாள் விடுமுறையை முன்னிட்டு, ஜூலை 4, 5 தேதிகளில் தமிழகம் முழுவதும் 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு செல்லவும் ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ஜூலை 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து […]

சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்துகள் முழுவீச்சில் இயக்கப்பட உள்ளன என தமிழக அரசு கூறியுள்ளது. சென்னை மாநகரில் தற்போது டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், 5 பணிமனைகளின் மூலம் 625 மின்சாரப் பேருந்துகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. […]

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; பள்ளிக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் பொருட்டு EMIS தொழில்நுட்ப குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியினை விரைந்து முடிக்கும் பொருட்டு EMIS App இல் […]

கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, “பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வரவழைத்த பின் பேருந்தை இயக்க வேண்டும்” என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் […]