fbpx

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் டிசம்பர் 21-ம் தேதி முதல் வழங்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு வரும் ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து …

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு திட்டத்தின் கீழ், 13 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் விதமாக மூன்று பேருக்கு …

Accident: கேரளாவில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் லட்சத்தீவை சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் 7 …

கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதால், தாம்பரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று அன்று காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை …

தமிழக அரசின் சார்பில் மொத்தமாக 3,071 புதிய பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2022-23-ம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 833 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மீதமுள்ள 167 …

ஆகஸ்ட் 24, 25-ம் தேதி வார இறுதி நாட்கள் 26-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய நகரங்களுக்கு ஏராளமானோர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க …

ரூ.300 கோடி மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மாநகர் போக்குவரத்துக் கழகத்தை (MTC) உலகத்தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டம் (CCP) செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, …

பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ம் தேதி வரை சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வரும் 19-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. …

ஒரே டிக்கெட்டில் 3 வகை போக்குவரத்த்தில் பயணிக்கும் புதிய திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே டிக்கெட்டில் 3 வகை போக்குவரத்தில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கானோர் மாநகரப் பேருந்துகள், மின்சார …

தமிழ்நாடு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. அதேபோல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை வாங்க நடத்துனர்களும் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் …