சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ்கள், ஆவணங்கள் திருத்தம் ஆகியவை குறித்து வெளியாகும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில அங்கீகாரம் இல்லாத நபர்கள் மற்றும் அமைப்புகள், சிபிஎஸ்இ குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் விரைவாக திருத்தமோ, மாற்றமோ […]

பள்ளிகளின் முக்கிய இடங்களில் CCTV கேமராக்களை நிறுவுமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE) அறிவுறுத்தி உள்ளது.. வகுப்பறைகள், தாழ்வாரங்கள் மற்றும் பிற பொதுவான இடங்களில், நிகழ்நேர ஆடியோவிஷுவல் கண்காணிப்புடன் கூடிய உயர் தெளிவுத்திறன் கொண்ட CCTV கேமராக்களை நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதையும், பிற மறைமுக அச்சுறுத்தல்களிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் CBSE தெரிவித்துள்ளது. […]