உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் சொந்தமாக எந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் அமைக்கவில்லை. இருப்பினும், மத்திய துறைத் திட்டங்களான பிரதமரின் வேளாண்-கடல் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளின் மேம்பாட்டுக்கான திட்டம்(பி.எம்.கே.எஸ்.ஒய்.), உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறது. இவற்றின் மூலம் இத்தகைய தொழில்களை அமைப்பதை அரசு ஊக்குவிக்கிறது. தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை […]

“பதிவு மசோதா 2025’ வரைவு குறித்து பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என நில வளத்துறை தெரிவித்துள்ளது ‌. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறை, நவீனமிக்க, ஆன்லைன் வழி, காகிதமற்ற மற்றும் குடிமக்களுக்கு உகந்த ‘பதிவு மசோதா 2025’ என்ற வரைவைத் தயாரித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு முந்தைய பதிவுச் சட்டம், 1908-க்கு மாற்றாக […]

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்காரைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 2025 – ம் ஆண்டு மே 19 அன்று, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் […]

ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப்பெற்றதுபோல் ரூ.500 நோட்டுகளைத் திரும்பப்பெற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்த பின்னர், பெரிய மதிப்பிலான ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 மதிப்பிலான நோட்டுகள் தேவையற்றது எனவும், அப்போது தான் ஊழலை ஒழிக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் அரசாங்கம் சார்பில் கடப்பாவில் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு; உலகில் […]

கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் […]