2027ஆம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் குழு பரிந்துரை செய்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும், மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் மாசுபட்ட நகரங்களில் காற்று மாசை குறைக்கும் வகையில் மின்சாரம் மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற வேண்டும் […]

சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார். இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிய போக்கில் உள்ளன, இது இந்தியாவில் சமையல் எண்ணெய் துறையில் சாதகமான சூழ்நிலையை அளிக்கிறது. உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு மத்தியில் சமையல் எண்ணெய்களின் சில்லறை விலையை மேலும் குறைப்பது […]

சர்வதேச தொலைத்தொடர்பு போக்குவரத்து குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச குறுஞ்செய்தி, உள்நாட்டு குறுஞ்செய்தி இலக்கணம் குறித்து பரிந்துரை அளிக்குமாறு தொலைத் தொடர்புத் துறை 30.08.2022 அன்று கேட்டுக்கொண்டு இருந்தது. தொலைத் தொடர்பு கட்டமைப்பில் உள்ள செயல்பாடு போக்குவரத்து அல்லது தொலைத்தொடர்பு போக்குவரத்து என்று அழைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு போக்குவரத்தில் குரல் அழைப்பு, குறுஞ்செய்தி உள்ளிட்ட வகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தொலைத்தொடர்பு போக்குவரத்தில் உள்நாட்டுப் […]

இந்தியாவில் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூலிப்பதற்கான பாஸ்டாக் முறையை செயல்படுத்துவது அதிகரித்துள்ளது. 2023 ஏப்ரல் 29 அன்று, இதன் மூலம் தினசரி சுங்க வசூல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 193.15 கோடியை, ஒரே நாளில் 1.16 கோடி பரிவர்த்தனைகள் மூலம் வசூல் செய்துள்ளது. 2021 பிப்ரவரி மாதத்தில் இருந்து பாஸ்டாக் கட்டாயம் என கொண்டுவரப்பட்டதிலிருந்து, 339 மாநில சுங்கச்சாவடிகள் உட்பட பாஸ்டாக் திட்டத்தின் கீழ் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 770 லிருந்து […]

தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 விண்ணப்பங்கள் மத்திய அரசு வரவேற்றுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் மிகச்சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாகவும், அவை மேலும் கூடுதலான உயர்நிலையை அடைவதற்கு ஊக்கப்படுத்தவும் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தேசிய அளவில் விருதுகளை வழங்குகிறது. இதன்படி, தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 வழங்குவதற்கு தொழில்துறை விருது, உற்பத்தி தொழில்துறை, சேவை தொழில்துறை, தொழில்களில் சிறப்பு பிரிவு மாநில விருது, மாவட்ட […]

மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும், ‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு முயற்சியில் சூடானில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3,000 பயணிகளை இந்தியா அழைத்து வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மீட்டு வரும் பயணிகளுக்குத் தேவையான தனிமைப்படுத்தல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,191 பயணிகள் வந்துள்ளனர். அதில் 117 பயணிகள் மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடாததால் தற்போது தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து […]

தமிழகத்தில் 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் 15,700 செவிலியர் பட்டதாரிகள் […]

இன்று டெல்லியில் மலேரியா ஒழிப்பு குறித்த ஆசிய பசிபிக் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மலேரியாவுக்கான ஆசிய பசிபிக் தலைவர்கள் கூட்டணியுடன் (APLMA) இணைந்து, இன்று டெல்லியில் மலேரியா ஒழிப்பு குறித்த ஆசிய பசிபிக் தலைவர்கள் மாநாட்டை நடத்த உள்ளது.. 2030-ம் ஆண்டிற்குள் மலேரியா ஒழிப்பு நடவடிக்கையை வலுப்படுத்துவதற்கான அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துவதை இந்த […]

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களை உருவாக்க ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களுக்கான கல்விக்கான நுழைவாயில்களை அதிகரிக்க அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2014ல் 723 ஆக இருந்தது. 2023ல் 1,113 ஆக கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 9 ஆண்டுகளில் 5,298 கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன (2014 இல் 38,498 ஆக இருந்தது 2023 இல் 43,796 […]