The Union Public Service Commission (UPSC) has issued a notification to fill vacant posts in the central government department.
central govt
சமூக ஊடகங்கள் முதல் ஓடிடி தளங்கள் வரை, வலைத்தளங்களில் ஆபாசம், தவறான தகவல் மற்றும் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்த ஏதுவாக கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட வலைதளப் பயனர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகதன்மையுடன் கூடிய சமூகப் பொறுப்பு மிக்க ஊடக செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் அரசின் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள வலைத்தளங்கள் எந்தவொரு சட்டவிரோத நிகழ்ச்சிகள் அல்லது தகவல்களை ஒளிபரப்புவதிலிருந்து, குறிப்பாக […]
மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 125 நாட்களாக அதிகரிக்க எடுக்கும் முயற்சியை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இன்றைய முதல்வர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். […]
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய நேரத்தில் காப்பீட்டுத் தொகை அளிக்கப்படுவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து மகசூல் செய்யப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்கள் கிடைத்த 21 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீட்டுத்தொகை செலுத்தப்படுகிறது. கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் 2024-25-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மொத்தம் 1,69,61,521 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.2,417.43 கோடி உரிமை கோரல்கள் கணக்கிடப்பட்டதாகவும் […]
பிரதமரின் சூரிய சக்தி வீடு, இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் 7.7 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் இல்லாமல் செய்துள்ளது. மத்திய அரசு பிப்ரவரி 2024-ல் பிரதமரின் சூரிய சக்தி வீடு: இலவச மின்சாரத் திட்டத்தை அறிமுகம் செய்தது. 2026-27 நிதியாண்டிற்குள் ரூ.75,021 கோடி செலவில் குடியிருப்புப் பகுதிகளில் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். 09.12.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் […]
மருந்துகளை பரிந்துரைக்கும்போது மருத்துவர்கள் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாடு முழுவதும் உள்ள அனைத்துமருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கும், தேசிய மருத்துவ ஆணைய செயலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: மருத்துவர்கள் மருந்து பரிந்துரைச் சீட்டுகளை தெளிவாக எழுதுவது தொடர்பான பாடத்தை மருத்துவ பாடத் திட்டத்தில் சேர்ப்பது அவசியம் என்று பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. பாதுகாக்கப்பட வேண்டிய மருத்துவ ஆவணங்கள் தெளிவாக […]
பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]
பனிமூட்டத்தின்போது பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை. தேசிய நெடுஞ்சாலைகளில் குளிர்காலப் பனிமூட்டத்தால் ஏற்படும் குறைந்த பார்வைத்திறனைக் கையாள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொறியியல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது.பொறியியல் நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த சாலை அடையாளங்கள், ஸ்டட்டுகள் மற்றும் பிரதிபலிப்பான்களை மீண்டும் நிறுவுதல், தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுதல், கட்டுமானப் பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் எச்சரிக்கை விளக்குகள் அமைத்தல் போன்ற […]
ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்: ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹஜ் பயணத்திற்கான குடியிருப்பு வசதி மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு 2026 பிப்ரவரி 1 கடைசி நாளாகும். இதையடுத்து ஹஜ் குழும ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா […]
கல்விக்கடன்களில் வாராக்கடன் 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரிந்துள்ளது. வித்யாலட்சுமி திட்டம் அமல்படுத்தப்பட்டது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் வழங்கிய நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் மொத்த வாராக்கடன் விகிதம், 2020-21 நிதியாண்டில் 7% ஆக இருந்தது. இது, 2024-25 நிதியாண்டில் 2% ஆகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது வங்கிகளின் கடன் சொத்துத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. திருத்தப்பட்ட மாதிரி கல்விக்கடன் திட்டத்தின்படி, […]

