ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச்சீட்டு பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச் சீட்டு முறைக்கு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தமுறை அறிமுகப்படுத்தப்பட்ட 2 மாதங்களில் 5.67 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. மொத்தம் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை பயன்படுத்தியுள்ளனர். 2025 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச் சீட்டு முறை மூலம் குறைவான கட்டணத்துடன் தேசிய நெடுஞ்சாலைகளை […]

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ வீரர்களுக்கான பாராசூட்டில் விமானப்படை வீரர்கள் 32,000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தனர். இந்த சோதனை, உள்நாட்டு அமைப்பின் திறன், நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட வடிவமைப்பை நிரூபித்துள்ளது. முக்கிய சிறப்பு: தற்போது இந்திய ஆயுதப்படைகள் பயன்படுத்தும் பாராசூட்களில், 25,000 அடிக்கு மேல் செயல்படக்கூடிய ஒரே பாராசூட் இதுவாகும்.உருவாக்கம்: ஆக்ராவில் உள்ள வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் […]

கோல்ட்ரிஃப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் இருமல் மருந்துகளை உட்கொண்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் ‘டை எத்திலீன் கிளைக்கால்’ எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த ‘கோல்ட்ரிஃப்’ […]

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுத்தமில்லாத கழிப்பறை பற்றி தகவல் அளித்தால், ரூ.1,000 அன்பளிப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிக்கையில்: தேசிய நெடுஞ்சாலை துறை தூய்மை பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சுங்கச் சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருந்தால் அதுபற்றி தகவல் அளிக்கலாம். இதற்கு […]

பிஎஸ்என்எல் நிறுவனம் மின்னணு சிம் சேவையை தொடங்கியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்னணு சிம் எனப்படும் சந்தாதாரரின் அடையாளங்கள் பதியப்பட்ட சிம் கார்டுகளின் சேவை செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கியதாக அறிவித்துள்ளது.இந்தப் புதிய தொழில்நுட்பம் அடிப்படையிலான சேவைகள், இதற்கான வசதிகளுடன் கூடிய மொபைல் சாதனங்கள் மற்றும் பிற சாதனங்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தச் சேவை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் […]

இறந்தவர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகம் அற்ப அரசியல் செய்கிறது, அதற்கு அதிமுகவும் பாஜகவும் துணை நிற்பதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டயுள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் […]

செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. போலியோ சொட்டு மருந்து என்பது போலியோ நோயைத் தடுப்பதற்கான ஒரு தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றது. மேலும் இந்த தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் […]

பீகாரிலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுமார் 100 சதவீத வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்காணும் புகைப்படத்துடன் கூடிய […]