ஆண்டிபயாடிக் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் உட்பட 128 வகையான மருந்துகளின் விலையை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்த நிலையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விலை மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாராசிட்டமால், இப்யூபுரூஃபன், அமோக்ஸிசிலின் உள்ளிட்ட பிற மருந்துகளின் விலைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த விலை திருத்தத்தில் அமோக்ஸிசிலின் மற்றும் கிளாவுலானிக் அமிலத்தின் ஆண்டிபயாடிக் ஊசிகள், வான்கோமைசின், ஆஸ்துமா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சல்புடெமால், புற்றுநோய் மருந்து டிரஸ்டுஜுமாப், […]

மத்திய மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் அழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பழைய வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவால், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களின் பதிவும் ரத்து செய்யப்படுகிறது. அரசின் இந்த புதிய உத்தரவு ஏப்ரல் […]

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்டணம் விளம்பரம் வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் பாரம்பரியமான அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் தவிர டிஜிட்டல் ஊடகங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரங்கள் முறைப்படுத்தப்படவில்லை. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வரும் […]

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு […]

கடந்த ஆண்டு இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை விட அதிகமாக இருந்தது என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.. சமீப காலமாக, இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. பில்களை செலுத்துவது முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்படுகிறது.. பணத்தை வேறொரு நபருக்கு அனுப்பவோ அல்லது பெறவோ நாம் இந்த […]

பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் கலந்திருப்பதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் வரும் 2025-ம் ஆண்டுக்குள் 87% பேர் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்று வெளிவந்த ஊடகசெய்திக்கு மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது போன்ற போலித் தகவல்கள் நுகர்வோர் மத்தியில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக செய்தி வெளிவந்தவுடன், மத்திய பால்வளத்துறை அமைச்சகம் இந்திய உணவு பாதுகாப்பு […]

மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்; மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள் 2022 நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சாரக் கட்டணம் அதன் உற்பத்திச் செலவு மற்றும் கொள்முதல் விலைகளுக்கு ஏற்ற வகையில்  ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் […]

சாலை விபத்துக்களை 2025-ஆம் ஆண்டுக்குள் 50% அளவுக்கு குறைக்க அனைவரது முயற்சிகளும் அவசியம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சாலைப் பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.இந்த நிகழ்ச்சியின் போது, திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு […]

சாலை பாதுகாப்பு வாரம் 2023 ஜனவரி 11 முதல் 17 வரை கடைபிடிக்கப்படும் நிலையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பொறியியல் நடைமுறைகளை அதிகரிக்க சாலை பாதுகாப்பு தணிக்கை குறித்து பொறியாளர்களுக்கு இந்த ஆணையம் பயிற்சி அளிக்கிறது. இதற்கு 15 நாட்கள் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிக்கும் பொறியாளர்களுக்கு மேலாளர் மற்றும் துணை பொது […]

பாசுமதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய எஃப்எஸ்எஸ்ஏஐ முடிவு 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது ‌. நாட்டிலேயே முதன் முறையாக பாஸ்மதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, இயற்கை நறுமணம் கொண்ட பாஸ்மதி அரிசி […]