தொழிற் படிப்பு பயிலும் சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய முப்படை வீரர் வாரியத்தின் பாரத பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை கோரி 2022-2023 -ஆம் ஆண்டு தொழிற் படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க 30:11.2022 வரை கால […]
central govt
அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை பெற பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் இடம் பெறுதல், மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் நியமனம், ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் வழங்குதல் என அனைத்துத் துறைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ்களை கட்டாய ஆவணமாக்க மத்திய அரசு முன்மொழிகிறது. முன்மொழியப்பட்டும் சட்டத்தின் படி, மருத்துவமனைகளில் அனைத்து இறப்புச் […]
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் மத்திய மாநில அரசின் வாயிலாக கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை நீங்கலாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் தீன் தயாள் உபாத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நிலையான […]
எஃகு மீதான ஏற்றுமதி வரியை அரசு திரும்பப் பெற்றுள்ளது. 2022, மே 22க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் 58% இரும்பு உள்ளடக்கத்திற்குக் குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாதுத் துகள்கள் மற்றும் பன்றி இரும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது. ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் […]
2022 செப்டம்பர் மாதத்துக்கான சுரங்கம் மற்றும் குவாரித்துறையில் கனிம உற்பத்தி குறியீடு 99.5 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.6 சதவீதம் அதிகமாகும். இந்திய கனிம துறையின் தற்காலிக புள்ளி விவரத்தின்படி, 2022-23 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் அதே கால கட்டத்தை விட 4.2 சதவீதமாகும். செப்டம்பர் 2022-ல் இறக்குமதி செய்யப்பட்ட கனிமங்களின் உற்பத்தி வருமாறு […]
வரும் மத்திய பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் என்று இந்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், 2023ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூலுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட 25-30% அதிகமாக இருக்கும் என்றார். அதேபோல நீண்ட கால மூலதன வரிக்கான வைத்திருக்கும் கடன் பத்திரங்களுக்கு […]
திரைப்பட விளம்பரங்களில் கட்டாயம் சான்றிதழ் வகையை குறிப்பிட வேண்டும் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்ட செய்தி குறிப்பில்: தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு மத்திய சான்றளிப்பு வாரியம் (சிபிஎஃப்சி) வழங்கும் தணிக்கை சான்றிதழின் வகையை விளம்பரங்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட […]
மத்திய அரசின் திட்டங்கள் பயனாளிகளை சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த அவர், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மத்திய […]
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில்; ‘IND-TN-10-MM-365 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற ஏழு தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தமிழக மீனவர்களின் 98 மீன்பிடிப்படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், […]
அரசு மின்னணு சந்தை இணைய தளம் தொடங்கப்பட்டதில் இருந்து ரூ.10,000 கோடிக்கு மேல் கொள்முதல் செய்துள்ள முதல் மத்திய பொதுத்துறை நிறுவனமாக இந்திய எஃகு ஆணையம் திகழ்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.2.7 கோடி என்ற சிறிய அளவில் கொள்முதலை தொடங்கிய இந்திய எஃகு ஆணையம் இந்த ஆண்டு கொள்முதல் மதிப்பை ரூ.10,000 கோடியாக கடந்தது. முந்தைய நிதியாண்டில் ரூ.4,614 கோடி அளவிற்கு கொள்முதல் செய்து அரசு மின்னணு சந்தை […]