உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். உருமாறிய கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா பரவலை தடுப்பதில் மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். கண்காணிப்பை […]
central govt
ஆயுதப்படைகளின் லட்சக்கணக்கான வீரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விதமாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 1, 2019 முதல் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தின் கீழ் ஆயுதப்படை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தை திருத்தியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் 25.13 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஜூலை 01, […]
பணப்புழக்கம் அதிகரித்தாலும், மற்றொரு பணமதிப்பிழப்பு திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணை அமைச்சர் விளக்கம். 2016 நவம்பர் அன்று இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இப்பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா […]
நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் ஷெட்யூல்டு மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 3,500 பேருக்கு இலவச பயிற்சியை அளிப்பதற்காக மே 2022 அன்று இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஷெட்யூல்டு மற்றம் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கான இந்த இலவசப் பயிற்சித் திட்டத்தின் கீழ் சேருவதற்கு மொத்தம் 50,177 பேர் விண்ணப்பங்களை அளித்தனர். இத்திட்டத்தின் கீழ், இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களில் 2,100 மாணவர்களுக்கும் 12-ம் வகுப்பு படித்தவர்களில் 1,400 மாணவர்களுக்கும் […]
கடந்த செப்டம்பர் மாதம் குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் குறித்த அறிவிக்கை வெளியானது முதல், நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான தட்டெடுப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கைக்குப் பிறகு இதுவரை 691 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கை வெளியான நாளன்று 905 தத்தெடுப்பு ஆணைகள் நிலுவையில் இருந்தன. தற்போதைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள ஆணைகளின் எண்ணிக்கை 617 ஆக குறைந்துள்ளது.குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் இனி தங்களது சொந்த மாநிலங்கள்/ பகுதிகளைத் […]
பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க ஏதுவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எத்தனால் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளது. எரிபொருள் தேவைக்கு ஏற்ப பெட்ரோலில் 10 சதவீதம் அளவுக்கு எத்தில் ஆல்கஹால் எனப்படும் எத்தனாலைக் கலக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில், தேவைக்கு ஏற்ப எத்தனால் சேமிப்பு நிலையங்களை அமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.எனவே, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள், சேமிப்பு முனையங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து […]
மத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் கூறியதாவது; பயிலரங்கு மற்றும் வட்டமேசை உரையாடலில் சிவில் சமூக அமைப்புகள், மாநிலக் கல்வித் துறை, பயிற்சியாளர்கள், தொழிற்கல்வி, தொழில் ஆலோசனைத் துறைகளில் பணிபுரியும் நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்களுடன், தற்போதைய மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.மாணவப் பருவத்தில் முறையான தொழில் பயிற்சி மூலம் பணியாளர்களை திறன்படுத்துவதில் இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும். இது போன்ற சிக்கல்களை புதிய கல்விக் […]
தமிழகத்தில் 755 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் 2017 மற்றும் 2021 க்கு இடையில் 6,677 NGO-களின் FCRA பதிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் எழுத்து பூரவமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், என்ஜிஓக்களின் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010ன் கீழ், விதிகளை மீறியதற்காக பதிவு ரத்து செய்யப்பட்டது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் […]
யூடியூப், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் ஏற்றும் எண்ணம் தற்பொழுது மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளது. டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் இயற்றும் உத்தேசம் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் பொழுது பதில் அளித்த அவர், 2000மாவது ஆண்டின் தகவல் […]
வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு சேவைகளை டிஜிட்டல் தளத்தின் மூலம் www.ncs.gov.in வழங்க தேசிய வேலைவாய்ப்பு சேவைத் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த இணையத்தளம் வேலை தேடும் நபர்கள், வேலை வழங்கும் நபர்களை ஒருங்கிணைக்கிறது. மாநில வேலைவாய்ப்பு இணையதளங்களுடன் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையப்பக்கத்தை இணைக்கப்பட்டுள்ளது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்து 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வேலை தேடுவோர் பதிவுக்கு தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையப்பக்கத்தை […]