பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ‘பருத்தி உற்பத்தித் திறன் இயக்கத்திற்கு தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பருத்தி சாகுபடி குறைவு, சாதகமற்ற காலநிலை, மண் வளம் பாதிப்பு மற்றும் பூச்சித் தாக்குதல் காரணமாகச் சமீபத்திய ஆண்டுகளில் பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளவும், பருத்தி உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்தவும் 2025-26 மத்திய பட்ஜெட்டில் ‘பருத்தி உற்பத்தித் திறன் இயக்கம்’  அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலநிலைக்கேற்ற மற்றும் பூச்சிகளை எதிர்க்கக்கூடிய […]

15 – வது நிதி ஆணையத்தின் கீழ் , தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7,523.06 கோடி ரூபாய் மானியத் தொகை விடுவிப்பு. 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில், மாநிலங்களில் உள்ள தகுதி வாய்ந்த கிராம பஞ்சாயத்து, தொகுதி பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு, பதினைந்தாம் நிதி ஆணையத்தின் மானியத் திட்டங்களின் கீழ், மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை விடுவித்துள்ளது. 15 – வது நிதி ஆணையத்தின் […]

பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் வரும் 15-ம் தேதி […]

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத்துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் குறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மறுஆய்வு தகவல்கள் அடங்கிய ஆவணத்தை கடந்த மாதம் (நவம்பர் 2025) 10-ம் தேதி ட்ராய் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை இம்மாதம் (டிசம்பர் 2025) 8-ம் தேதிக்குள்ளும் அது தொடர்பான விமர்சனங்களை இம்மாதம் (டிசம்பர் 2025) […]

நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் குழாய் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிலத்திற்கு அடியில் அமைத்துள்ள குழாய்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. முறையான அனுமதியின்றி நிலத்தை தோண்டும் நடவடிக்கைகள் காரணமாக நிலத்திற்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு […]

ஆபரேசன் சாகர் பந்து – இலங்கைக்கு 1000 டன் நிவாரணப் பொருட்களை வழங்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை அனுப்புகிறது. இலங்கைக்கு தேடல் மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேசன் சாகர் பந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படை ஐஎன்எஸ் கரியல், எல்சியு 54, எல்சியு 51, எல்சியு […]

விதைகள் வரைவு மசோதா 2025 குறித்த கருத்துகளை 11-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் […]

வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு நிறைவடைந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வக்ஃப் சொத்து விவரங்களைப் பதிவு செய்து நிர்வகிப்பதற்காக உமீத் என்ற தளம் 2025 ஜூன் 6 அன்று தொடங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்களின்படி 6 மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. டிசம்பர் 6, 2025 அன்று பதிவு செய்வதற்கான கெடு நிறைவடைந்தது.காலக்கெடு நிறைவடையும் இறுதி நாட்களில் பதிவுகள் கணிசமாக அதிகரித்தது. பல மறுஆய்வுக் […]