தேசிய கல்விக்கொள்கை யின் பரிந்துரைகளின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் மேலும் ஒரு இந்தியமொழியை கற்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி செயலர் அனுப்பிய சுற்றறிக்கையில்; மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை–2020, தேசிய ஒருமைப்பாடு, அனைவருக்கான வளர்ச்சி ஆகியவற்றுக்காக, பன்மொழி திறன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ‘மேலும் ஒரு இந்திய […]

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இதுவரை 23.09 லட்சம் பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 18 வகையான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. 01.12.2025 நிலவரப்படி 30 லட்சம் பயனாளிகள் இதில் பதிவு செய்து அவர்களில் 23.09 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, […]

நடப்பு நிதியாண்டில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு ‌ உஜ்வாலா திட்டம் (பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா – PMUY) என்பது, இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு, இலவச சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளை வழங்குவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும், இதன் முக்கிய நோக்கம், சுத்தமான சமையல் […]

பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குபவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான தளம். நாடு முழுவதும் இலவச சட்ட உதவிச் சேவைகளை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கி, இலவச சட்ட சேவை கலாச்சாரத்தை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, 2017-ம் ஆண்டு நியாய பந்து (புரோ போனோ) எனப்படும் இலவச சட்ட சேவைத் திட்டத்தை அரசு தொடங்கியது. இது சட்ட சேவைகள் சட்டம் -1987-ன் பிரிவு 12-ன் கீழ் இலவச சட்ட உதவியைப் […]

வெள்ளிப் பொருட்களுக்கு கட்டாய ஹெச்யுஐடி (பிரத்தியேக ஹால்மார்க் அடையாள எண்) திட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முதல் மூன்று மாதங்களுக்குள், 17 லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப் பொருட்கள் இந்தப் பிரத்தியேக எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது நகைக்கடைக்காரர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் வலுவான வரவேற்பைப் பிரதிபலிக்கிறது. வெள்ளிப் பொருட்களுக்கு ஹால்மார்க்கிங் திட்டம் தன்னார்வமாக இருந்தாலும், ஹால்மார்க் செய்யப்பட்ட எந்த வெள்ளிப் பொருளுக்கும் ஹெச்யுஐடி எண்ணைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஹால்மார்க் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் கிட்டத்தட்ட […]

குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் நாடு தழுவிய நூறு நாள் தீவிர விழிப்புணர்வு இயக்கம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கப்படுகிறது. இந்தியாவில் குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் நாடு தழுவிய நூறு நாள் தீவிர விழிப்புணர்வு இயக்கம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கப்படுகிறது. குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா இயக்கத்தின் ஓராண்டு காலத்தை குறிக்கும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த […]

அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையைக் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையை கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சட்ட அளவீட்டு (பொட்டலப் பொருள்கள்) இரண்டாவது (திருத்தம்) விதிகள், 2025 அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திருத்தப்பட்ட விதிகள் 2026 பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. 10 கிராம் அல்லது […]