ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் பனைத்தொழிலாளி ராஜலட்சுமி(42).  வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கி விட்டு திரும்பியபோது, டூவீலரில் வந்த இருவர் ராஜலட்சுமி போட்டிருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த குடும்பத்தினர் காரில் திருடர்கள் இருவரையும் விரட்டிச் சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் 10 கிமீ தூரம் வரை துரத்தி சென்ற நிலையில், டூவீலரை போட்டு […]