சென்னை மாநகரப் பகுதிகளில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு அச்சமூட்டும் […]

ஓய்வூதியர் பணப்பலன் வழங்குவதற்காக ரூ.1,137 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்காலிக முன்பணமாக (கடன்) தமிழக அரசு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்த உத்தரவில்: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதியுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். இதை பரிசீலித்த அரசு, […]

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, முற்பகலில் தெற்கு […]

தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த […]

அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்: இந்தியா – அமெரிக்கா இடையே, இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன். தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். அதேநேரம், அமெரிக்காவின் 25 சதவீத […]

வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, […]