கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 12 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்: முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்..? விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் பி.மகேஷ், சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங்; ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன. ஆகஸ்ட் 15-ம் தேதி வரை முதல்கட்டமாக நடைமேடைகள், ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆக‌ஸ்ட் 16 முதல் செப்டம்பர் 16-ம் […]

தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா இடையே நேற்று இரவு கரையை கடந்தது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது […]

தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைப்பது வழக்கம். அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி […]

எண்ணூர் அனல் மின நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. திருவள்ளூர் மாவட்டம், வாயலூரில் 2×660 MW மெகா வாட் திறனுடைய எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. பாரதமிகு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் இந்தக் கட்டுமான பணியில் 3,000-க்கும் மேற்பட்ட […]

சென்னை யுகோ வங்கியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. வங்கி ஊழியர்கள் அளித்த புகார் மெயிலில், ஒரு உயர் அதிகாரி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. ஒரு ஊழியர் தன் அம்மாவின் மரணம் காரணமாக எமெர்ஜென்சி விடுப்பு கோரினார். ஆனால், தலைமைப் பதவியில் இருக்கும் அந்த அதிகாரி, “எல்லோருடைய அம்மாவும் தான் இறப்பார்கள். டிராமா போடாதே.. உடனடியாக ஆபீஸ் சேருங்கள், இல்லையெனில் சம்பளம் பிடிக்கப்படும்” […]