காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களில் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 377 காலிப்பணியிடங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் […]

சென்னையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டு மண்டல தூய்மைப் பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் மேற்கொண்டனர். தூய்மைப் பணியாளர்களுடன் அரசு தரப்பு மேற்கொண்ட […]

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் கட்டைப் பையுடன் வந்த இளைஞர், “சாலையில் கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு ஒப்படைக்க வந்தேன்” என்று பாதுகாப்பு போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவர் கூறிய இடம் மற்றும் காரணம் குறித்து விசாரிக்க, இளைஞர் முன்–பின் முரண்பாடாக பதில் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில், அந்தக் குழந்தை தன்னுடையது என அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் ஊட்டியைச் சேர்ந்த […]

சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உரிமையாளர்கள் பட்ட வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி வட்டாட்சியருக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், ‘அ’ பதிவேட்டில் கிராம நத்தம், நத்தம், வீடு, வீட்டு […]

சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி செயல்படுகின்றன. அதேபோன்று, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் […]

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி தலைவராக பரத் தேர்வாகியுள்ளார். தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து வந்தனர். இவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய 3 பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட்ட நிலையில், சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில […]