சென்னை எழும்பூர் காவல் ஆனையர் அலுவலகம் அருகே சரக்கு வாகனம் மோதி ஸ்கூட்டரில் வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் புதுப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதேவி(42) என்பவர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணை மோதிய சரக்கு வாகனம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

வேலைவாய்ப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்து மக்களை ஏமாற்ற டி.என்.பி.எஸ்.சி துணை போகக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய […]

சென்னையில், 4 நாட்கள் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெறவுடுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில், 4 நாட்கள் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெறவுடுள்ளது. இந்த பயிற்சி வரும் 21.07.2025 முதல் 24.07.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் […]

நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 20 சதவீதம் இடங்கள் வழங்கப்படும்’ என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். உயர்கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதால் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். மேலும், […]

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வரும் 10.07.2025 முதல் 12.07.2025 (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம் EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டியில் நடைபெற உள்ளது. பயிற்சி முடிவில், நீங்கள் பின்வரும்வற்றை கற்றுக்கொள்வீர்கள்: மின்சார வாகன (EV) தொழில்நுட்பத்தை தெளிவாக […]

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு […]

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார். முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ’உங்களுடன் ஸ்டாலின்’ […]

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பயன்களைப் பெற அனுமதி அளித்த அரசு உத்தரவு. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு […]

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, பயிற்சி மையங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 3 ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டத்தால் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 393 மாணவர்கள், முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் […]

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதல் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் […]