தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாகநீடிக்கிறது. தெற்கு அந்தமான்கடல், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் […]
Chennai
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு […]
தமிழகத்தில் இன்று தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் […]
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு. 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் பொருட்டு வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் […]
வங்கக் கடலில் 22-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 25-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு அல்லது வட […]
கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை சென்னை ஐஐடி தொடங்கி உள்ளது. கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை 5 நாள் (2026 பிப்ரவரி 9 முதல் 13 வரை) நடத்தவிருப்பதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இந்தப் படிப்பு, துறைமுகம், கப்பல் போக்குவரத்து, கடல்சார் தொழில்துறை ஆகியவற்றில் அத்தியாவசியமான உத்திசார்ந்த சட்டம் மற்றும் செயல்பாட்டு அறிவுடன் ஊழியர்களைத் தயார்படுத்தவும் மற்றும் புதிதாக வேலை தேடுவோருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பணி செய்வோருக்கு […]
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு […]
வங்கக் கடலில் 22-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும் 22-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு […]
சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வு செய்ய மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலா்ம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமைமிகுந்த தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு […]
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் கூடும். இதன் காரணமாக இன்று தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, […]

