உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் புறநகர்ப் பகுதியில் இன்று மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சஹஸ்த்ரதாரா பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.. கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கைக்காக மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.. நேற்று இரவு முதல் டேராடூனில் பெய்த […]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் பலியாகினர். 5 பேர் காணாமல் போயுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்களில், 41 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். ரியாசி, அனந்த்நாக், கதுவா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த பெருமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. கனமழையால், தாழ்வான […]

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் பதார் தஷோதி பகுதியில் இன்று திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. மேலும் இந்த வெள்ளத்தில் ஒரு சமூக சமையலறை கொட்டகை அடித்துச் செல்லப்பட்டது… இதில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.. ஜம்மு & காஷ்மீரின் பல பகுதிகளில் அடுத்த 4–6 மணி நேரத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும் […]

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில், இரண்டு கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ நேரத்தில் மொத்தம் 29 தொழிலாளர்கள் முகாமில் இருந்தனர். இதில் 20 பேர் மீட்கப்பட்டதாகவும், 7 பேர் காணாமற்போனதாகவும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. பின்னர், காணாமல் போனவர்களில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 7 தொழிலாளர்களும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை […]

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், ஹோட்டல் தளத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் மேகவெடிப்பால், திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் மேல் தளம் சேதமடைந்ததில் ஒன்பது தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர் . இந்த சம்பவம் நள்ளிரவு 2 மணியளவில் நடந்துள்ளது, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செய்தி நிறுவனமான PTI படி, தெஹ்ஸில் பர்கோட்டில் உள்ள பாலிகாட்-சிலாய் […]