முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. தலைசுற்றல் காரணமாக கடந்த 21-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. மேலும் அவருக்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.. 3 நாட்கள் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், மருத்துவமனையில் இருந்தே அரசு அலுவல் பணிகளை கவனித்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று ‘உங்களுடன் […]

தமிழ்நாட்டில் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் உயர்வு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் தனிநபர் வருமானம் 1.96 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.. இதுகுறித்து நிதியமைச்சர் தனது சமூக வலைதள பதிவில் “ மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் […]

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பேசிய ஸ்டாலின் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார்.. தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, Bye, bye சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர். சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் […]