ரூ.21,650-க்கு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கைக்கணினி (டேப்) வழங்கப்படும் […]

நாமக்கல் மாவட்டம் Excel பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை. கல்லூரியில் உணவு சமைக்கவும், கல்லூரியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் Excel பொறியியல் கல்லூரி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 1000-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சிலர், இக்கல்லூரிக்குச் சொந்தமான விடுதியில் தங்கிப் […]

பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதல்வர் ஆலோசனைப்படி 20.06.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணவர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்க்கரை, எண்ணெய் பொறித்த உணவு பொருட்கள் குறித்த அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்தியாவில் உடல் பருமன் தீவிர பொது சுகாதார பிரச்சினையாக இருக்கிறது என சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து பள்ளி, […]

தருமபுரி மாவட்டத்தில் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ […]

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான […]

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஜூலை 31 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான […]

2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி […]

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளில் சேரும் முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என யுஜிசி எச்சரித்துள்ளது. இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த பட்டம், இரட்டைப் பட்டப்படிப்பு திட்டங்களின் விதிமுறைகள்- 2022 யுஜிசி-யால் 2023 டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்-2023 விதிமுறைகளும் […]