காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், தேசிய ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) தாக்கல் செய்த புகாரை டெல்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த புகார் ‘விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று […]

அமலாக்கத்துறை விசாரித்து வரும் நேஷ்னல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றம் தடுப்பு பிரிவு காவல்துறை வழக்கு பதிவு. அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரின் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர். கடந்த 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டபோது அதை நடத்திய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 90 கோடி […]

பீகாரில் மொத்தம் 243 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்துள்ளது.. நவ.6-ம் தேதி 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 122 தொகுதிகளுக்கு இன்று 2-வது கட்ட வாக்குப்பதிவில் 67.14% வாக்குகள் பதிவாகி உள்ளது.. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.. பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும் பிரபல தேர்தல் வியூக […]

தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தவெக கரூர் கூட்டத்தில் உயிரிழந்த பலர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் முக்கிய குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரணையில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. […]

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், கரூர் நெரிசல் சம்பவம் குறித்த விசாரணையில் இருந்து விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தெரிவித்துள்ளார். கரூரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி […]