ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகன் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.ஐ-யிடம் டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சியை அபகரிக்கும் நோக்கில் அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததாக ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. […]