ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (42).இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் மூளையில் ரத்தக் கசிவு காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ஹரி கிருஷ்ணனின் சகோதரர் பிரசாத் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறார். சொந்த ஊருக்கு சென்றிருந்த ஹரிகிருஷ்ணனின் மனைவி வெங்கடசுமலதா(34), அவருடைய மகன் […]

சிவகங்கை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருபுவனத்தில் அரசு மதுபான கிடங்கு ஒன்று இயங்கி வருகிறது. இங்கே பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுபானங்கள் லாரிகளின் மூலமாக கொண்டு வரப்பட்டு அதன் பிறகு அங்கிருந்து அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதாவது குடோனில் மதுபானங்கள் இருப்பு அதிகமாக இருந்தால் லாரிகளில் கொண்டு வரப்படும் மதுபானங்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பிறகு குடோனில் இடம் காலியான பிறகு அங்கு மதுபான […]

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் தார்பாய் முருகன் மற்றும் ரமேஷ் உள்ளிட்ட இருவரும், இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த இருவருக்குள் ஏற்பட்ட மோதலால் கடந்த 1998 ஆம் வருடம் திருமங்கலம் அருகே ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுக்கல் ஆர் வி நகரை சேர்ந்த பாலன் என்பவரின் மகன் ரமேஷ்குமார் (47) என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது செக்கானூரணி காவல்துறையினர் […]

சிவகங்கை அருகே தெப்பக்குளம் கரையில் உணவகம் நடத்தி வருபவர் விவேகானந்தன்(45) இவருடைய ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு வருகை புரிந்த இருவர் 400 ரூபாய்க்கு அசைவ உணவுகளை பார்சல் வாங்கி இருக்கிறார்கள். அவர்களிடம் விவேகானந்தன் அவர்கள் வழங்கிய உணவுக்கான பணத்தை கேட்டிருக்கிறார். ஆனால் அந்த இருவரும் பணம் தர மறுத்ததுடன், விவேகானந்தனை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. விவேகானந்தனை மிரட்டியது மட்டுமல்லாமல் அவரை கடுமையான முறையில் தாக்கிவிட்டு உணவு பொருட்களையும் […]

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பிரேம்குமார் (57) இவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர். இவரது மனைவி விஜிலா இவரும் மருத்துவராக இருக்கிறார் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் சென்னையில் எம்பிபிஎஸ் இறுதி வருடம் படித்து வருகிறார். இதற்காக விஜிலா தன்னுடைய மகளுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். இத்தகைய நிலையில், பிரேம்குமார் தன்னுடைய மருத்துவமனைக்கு விடுமுறை வழங்கிவிட்டு ஒரே வளாகத்தில் உள்ள தன்னுடைய வீட்டையும், […]

ராமநாதபுரம் அருகே லாந்தை என்ற கிராமத்தில் ஜி டி எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்று தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று இருந்தது. இந்த கோபுரம் அந்த கிராமத்தைச் சேர்ந்த கருத்தமுத்து, பெருமாயி, நித்யானந்தம்மாள், கிருஷ்ணமூர்த்தி, மங்களேஸ்வரி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்தில் நிறுவப்பட்டு இருந்தது. இந்த கோபுரத்தின் செயல்பாடு கடந்த சில வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய நிலையில், அந்த நிறுவனத்தின் மேலாளரான சென்னையை சேர்ந்த தாஜ்மல்கான் வந்து பார்த்தபோது […]

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருக்கின்ற வஹாட் என்ற மாவட்டத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் கதாநாயகங்களை வைத்து விபச்சார தொழில் நடத்தப்படுகிறது. என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர். அப்போது ஒரு மாடல் அழகி மற்றும் 2 கதாநாயகிகள் என்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் சொகுசு விடுதியில் சிலரின் நடமாட்டம் சந்தேகத்தை உண்டாக்கியது. […]

கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தின் மூலமாக தங்கம் கடத்தப்பட்டு வருவதாக உளவுத்துறை மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, கோவைக்கு விமானம் மூலமாக வந்த பயணிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிகாரிகளுக்கு 4 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட அவர்களை தனியே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பயணிகள் பேண்ட் […]

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில், கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பத்தலுபட்டி விலக்கு […]

சென்னை கொளத்தூர் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்( 70) ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர், கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு 4 நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் வீட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 18 பவுன் நகைகள், வெள்ளி பூஜை பொருட்கள், 1 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை காணாமல் போய் இருந்தது தெரிய […]