காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதிப்பதற்காக, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின்139-வது கூட்டம் நாளை காலை டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 55-வது அவசர கூட்டமும் நாளை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிற்கான உரிய நீர்ப் பங்கீட்டின்படி, ஜூன், ஜூலை மற்றும் நடப்பு ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்குச் சேர்த்து மொத்தம் 88 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக […]

