சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் வணிக சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து 4வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. […]

சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மயானங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் பல்வேறு […]

சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.05.2025. வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. சேலம் மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் ஆகியோர்களைக் கொண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் […]