கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் அனுப்பிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண். உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி விஜய் நேரில் வராத காரணத்தினால் பணத்தை திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளார். கரூரில் கடந்த செப்-27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற […]

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாலை வயலுக்குச் சென்றனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த கழுதூர் கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ […]

இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் டைஎதிலீன் கிளைகோல் நச்சு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, […]

ஆந்திரப் பிரதேசத்தின் கோனசீமா மாவட்டத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், மேலும் 8 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் கோனசீமா மாவட்டம், ராயாவரம் மண்டலத்தில் உள்ள உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலையான லட்சுமி கணபதி பனா சஞ்சா தயாரிப்பு மையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் […]