சார்பதிவாளர் அலுவலகங்கள் வீடியோ காட்சிகளுடன் சேர்த்து குரல் பதிவுகளையும் கண்காணிக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது பதிவுத்துறையில் 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் சொத்து ஆவண பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களும் வழங்கப்பட்டு ஆவணப்பதிவுகள் நடக்கின்றன. விசேஷ நாட்களில் கூடுதலாகவே டோக்கன் வழங்கப்படுகின்றன.. […]