திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு ரீதியாக தற்போது 78 மாவட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் உட்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. முன்னதாக, தேர்தலுக்கு முன்பாகவே அமைப்பு ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அப்போது 6 மாவட்டங்கள் மட்டுமே புதிதாகப் பிரிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டன. இதனிடையே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட தோல்வி குறித்து […]

