அடிமட்டம் வரை அதிரடி! ஓ.பி.எஸ்-க்கு மாநில பொறுப்பு?. மாற்று கட்சியினருக்கு மா.செ பதவி?. அதிர வைக்கும் ஸ்டாலினின் லிஸ்ட்!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு ரீதியாக தற்போது 78 மாவட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் உட்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.


முன்னதாக, தேர்தலுக்கு முன்பாகவே அமைப்பு ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அப்போது 6 மாவட்டங்கள் மட்டுமே புதிதாகப் பிரிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டன.

இதனிடையே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட தோல்வி குறித்து விரிவாக ஆராய திமுக தலைமை சார்பில் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையில் தயாரித்த விரிவான அறிக்கையை கட்சித் தலைவரிடம் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, கட்சியின் உட்கட்டமைப்புகளை அடிமட்டம் வரை மேம்படுத்தவும் சீரமைக்கவும் தனியாக மறுசீரமைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்து, தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், திமுக மறுசீரமைப்பு குழுவினர் நேற்றைய தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துத் தங்களது முதற்கட்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்டப் பிரிப்பு மற்றும் கட்சி நிர்வாக மாற்றம் குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை திமுக தலைவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், திமுகவில் சுமார் 10 மாவட்டச் செயலாளர்கள் வரை நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் உள்ளிட்ட புதியவர்களுக்குமாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கி எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த திமுக தலைமை திட்டம் என கூறப்படுகிறது.

திமுக மறுசீரமைப்பு குழு வழங்கிய முதற்கட்ட அறிக்கையின் படி மாவட்ட செயலாளர்கள் மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஓ.பி.எஸ் க்கு மாநில பொறுப்பும், மாற்று கட்சியில் இருந்து திமுக வந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் பொறுப்பும் வழங்குவது குறித்தும் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிகிறது.

உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம், இடைகாலமாக மேற்கொள்ள வேண்டிய மாற்றம், நீண்டகால மாற்றம் என் கட்சியின் கட்டுமானங்களில் மாற்றங்கள் செய்ய மறுசீரமைப்பு குழு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரைத்த முதற்கட்ட அறிக்கை வழங்கியுள்ளது

இந்த அறிக்கையின் படி மாற்றங்கள் மேற்கோள்ள திமுக தலைவர் முடிவு செய்து அதற்காக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த சில தினங்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இதுகுறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதில், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளும், பெண்களை மாவட்ட செயலாளர்களாக மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், இன்று அல்லது நாளைக்குள் திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் குறித்த அதிகரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஒரு மாவட்ட செயலாளர் பொறுப்பில் குறைந்தபட்சம் 2 சட்டமன்ற தொகுதி முதல் அதிகபட்சமாக 6 தொகுதி வரை உள்ளது. இதனை மாற்றி ஒரு மாவட்ட செயலாளருக்கு அதிகபட்சமாக 3 தொகுதிகள் என மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஓ.பி.எஸ் க்கு மாநில பொறுப்பும், மாற்று கட்சியில் இருந்து திமுக வந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பும் வழங்குவது குறித்தும் பரிசீலனை என தகவல். மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கும் நிர்வாகிகளுக்கு மாநில பொறுப்புகள் அல்லது கட்சியின் பல்வேறு அணியின் மாநில பொறுப்புகள் வழங்க திட்டம். மாற்று கட்சியைச் சார்ந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கினால் முக்கச்சியில் நீண்ட நாளாக பயணிக்க கூடிய அவர்கள் இடையே உட்கட்சி பூசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

1newsnationuser5

Next Post

அரசின் கொள்கையை கேள்வி கேட்க நீங்கள் யார்?. கரூர் அரசுப்பணி வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை!. உச்சநீதிமன்றம் அதிரடி

Fri Aug 14 , 2026
கடந்த ஆண்டு கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பான முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்டிவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று […]
karur 1

You May Like