தமிழகத்தில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் மகளிருக்கான 6 புதிய ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 தங்கும் விடுதிகள் சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்கும் விடுதிகளும் சீரமைக்கப்பட்டு செயல்படுகின்றன. தற்போது மொத்தம் 19 விடுதிகள் […]

தமிழக சட்டப்பேரவை மரபுகளை பேரவைத் தலைவர் மதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; பாமகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக சேலம் மேற்கு எம்எல்ஏ இரா.அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய கொறடாவாக மயிலம் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டு 108 நாட்கள் ஆகின்றன. அதேபோல், பேரவைக் குழுத் தலைவராக ஜி.கே.மணி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக மேட்டூர் […]

முதல்வர் மு.க. ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து கூற வேண்டும் என சட்டப்பேரவையில் கேட்டால், சபாநாயகர் அப்பாவு ஏன் பதறுகிறார் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் என்பவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை நாத்திகர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து மத […]

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் திமுக, விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று, மக்கள் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, 150-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் […]

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து நின்றாலும் 23% வாக்குகளை கைப்பற்றும் என திமுக நடத்திய ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் தேர்தலாக மாறியுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணி வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் என்றாலும், புதிய தலைமைகள் மற்றும் இளைய தலைமுறை வருகையால் தேர்தல் கணிக்க முடியாத போட்டியாக மாறலாம். திமுக தலைமையிலான […]

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து உறுதியளிக்கவில்லை என ஃபாக்ஸ்கான் மறுப்பு தெரிவித்துள்ளது. அரை நாளில் திமுக அரசின் புளுகு அம்பலமானது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், […]

திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக  சென்னை மற்றும் மதுரையில் ரூ.43.88 இலட்சம் செலவில் “அரண்” திருநங்கையர்களுக்கான இல்லங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சமூகத்தில் திருநங்கையர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன், மரபு சார்ந்த “அரவாணிகள்” என்ற சொல்லுக்கு மாற்றாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் “திருநங்கை” என்ற மரியாதைக்குரிய சொல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. திருநங்கைகளுக்கும் முழுமையான சமூகப் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கி, அவர்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, […]

இறந்தவர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகம் அற்ப அரசியல் செய்கிறது, அதற்கு அதிமுகவும் பாஜகவும் துணை நிற்பதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டயுள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் […]