துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், முத்தரசன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து […]

கொள்கை எதிரிகளோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தவெகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் விஜய் கூட்டணி தொடர்பான முக்கியமான அறிவிப்பை வெளியிட்டா. அப்போது பேசிய அவர் “ கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி, வேற்றுமையை விதைத்து குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது தேமுதிக. ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேமுதிக […]

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக்கூடும் என தகவல் வெளியாகி வருகிறது. ராஜ்யசபா தேர்தலில் வைகோவுக்கு இடம் கொடுக்காததால், மதிமுக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விரைவில் வெளியேறக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா […]