மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவதற்கான பணிகளை மத்திய அரசுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல். மேலும் தமிழகத்தில் விரைவில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2026 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட் ( TNPDCL ) மாதாந்திரக் கட்டண முறையை அமல்படுத்த ஸ்மார்ட் […]
EB bill
தவறான கணக்கீடு செய்யும் கணக்கீட்டாளர் மீது துணை நிதி கட்டுபாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து துணை நிதி கட்டுபாட்டாளர்களுக்கு நிதி இயக்குநர் எழுதிய கடிதத்தில் ; துணை நிதி கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் வட்டங்களில் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை அந்தந்த தலைமை பிரிவு அலுவலங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இருப்பினும் அவ்வப்போது மின்கணக்கீட்டு பணியாளர்கள் தவறாக மின்கணக்கீடு செய்வதால் வாரியத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. துணை நிதி […]
புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், மீட்டர் வாடகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு, மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை மற்றும் மும்முனைப் பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும் புதிய மின் இணைப்பு வழங்க, மீட்டர் வைப்புத்தொகை, மின் பயன்பாடு வைப்புத்தொகை, வளர்ச்சிக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், […]
தொழிற்சாலைகள், குடிசை மற்றும் குறுந்தொழில்கள் உள்ளிட்டவற்றுக்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசே மானியமாக வாரியத்துக்கு வழங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தில் வீட்டு மின்நுகர்வோரைத் தவிர தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிஃப்ட், உடற்பயிற்சிக் கூடம் […]
மின் கட்டண உயர்வு குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தாலும் வீட்டு மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இருக்காது. எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, […]
மொபைல் போன்களில் வரும் போலியான லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது; மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடுப்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும் எனவும் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் அந்த பதிவில், […]
தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரவி வருகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுகுறித்து மக்கள் கருத்து கேட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த […]