fbpx

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலாக தமிழிசை அல்லது வானதி சீனிவாசன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதற்கிடையே, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். அவ்வாறு இருந்தால், மாநில தலைவர் …

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுகவின் அடுத்தடுத்த ஆயத்த பணிகள் குறித்து அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அதிமுக சார்பில் 82 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் காணொளி மூலம் …

டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். …

இன்று முதல் 5-ம் தேதி வரையும் மற்றும் பிப்ரவரி 8-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான …

அடுத்த இரண்டு நாட்களில் பாஜக மாநில தலைவர் யார் என்கின்ற அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை 2020-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்காக …

சீமானுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப் பெற கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மறைந்த …

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறவால் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் …

இன்ஸ்டாகிராமில் 55 லட்சத்துக்கும் அதிகமான பாலோவெர்ஸ்களை வைத்திருக்கும் ஹிந்தி பிக்பாஸ் பிரபலம் அஜஸ் கான், மும்பையின் வெர்சோவா தொகுதியில் போட்டியிட்ட நிலையில் வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். நோட்டா கூட 700க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.

பிக் பாஸ் புகழ் நடிகரும், அரசியல்வாதியுமான அஜாஸ் கான், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெர்சோவா தொகுதியில் வெறும் …

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இதனால் எந்தவொரு …

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வேட்பாளராக ஜனநாய கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும், குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பு மிக்க அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை மட்டுமே நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலை நவம்பர் முதல் செவ்வாய்க்கிழமையாக நிர்ணயிக்க …