ஆம் ஆத்மி கட்சியை (ஏஏபி) தேசியக் கட்சியாக அங்கீகரிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் செயல்திறன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் புதுப்பிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.. அதன்படி தற்போது ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.. ஆனால் அதே நேரத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), மேற்கு வங்க முதல்வர் மம்தா […]

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்ப இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பிஎஸ் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது; அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை சட்டவிரோதமாக அறிவித்துள்ளனர். கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. […]

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை […]

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் 27.02.2023 அன்று நடைபெறும் என்றும் வாக்குகள் 02.03.2023 அன்று நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் 18.01.2023 அன்று அறிவித்தது. இந்த மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான முகமது ஃபைசலுக்கு எதிரான வழக்கில் லட்சத்தீவின் கவரட்டி அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இருப்பினும், முகமது ஃபைசல் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது […]

2023 ஜனவரி முதல் தேதியில் இருந்து புதிய நிர்வாக அலகுகளை உருவாக்க முழு தடை விதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விடுத்துள்ள வேண்டுகோளை அடுத்து, 1950-ம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(A) பிரிவின்படி அசாம் மாநிலத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, […]

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 38.83 லட்சம் பேர். சென்ற 2021 ஆண்டு 3.2 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 2 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலி வாக்காளர்களை அடையாளம் காண தேர்தல் ஆணையம் புதிய மென்பொருளை உருவாக்கியது. இதை பயன்படுத்தி போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. மேலும் போட்டோ […]

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளார். பாஜக காஷ்மீரி பண்டிட்களை தங்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று கூறினார். பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது, “இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாக இல்லாமல் வெறும் […]

அதிமுகவின் சின்னம் முடக்கப்படலாம் என முன்னாள் ஐ.டி விங் செயலாளர் பகிரங்க கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணிக்கும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது. அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்ட வில் மற்றும் அம்பு சின்னத்தை இரண்டு குழுக்களும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணிக்கும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது. அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் ‘சிவசேனா’வுக்கு ஒதுக்கப்பட்ட வில் மற்றும் அம்பு சின்னத்தை இரண்டு குழுக்களும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. […]