தெலங்கானாவின் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள பீம்கல் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த சுதாகர் என்பவர், காவல் நிலைய வளாகத்திலேயே தீக்குளித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிய உணவகம் நடத்தி வரும் சுதாகர், தனது கடைக்கு வெளியே வாடிக்கையாளர்கள் அமருவதற்காக மேஜைகளை அமைத்திருந்தார். இதுதொடர்பாக அவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த நிலையில், […]

