மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்…? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை; நெல்லுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள கொள்முதல் விலையும் உழவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. […]
farmers
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய நாள்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக இன்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்கேற்கிறார். 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக சேலத்துக்கு இன்று வருகிறார். காலை 10 […]
நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு கொண்டுவந்த திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிம் கிசான்) திட்டம். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளாக இந்தப் பணம் பிரித்து வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே அரசு […]
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை […]
நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல. மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024-25ஆம் ஆண்டில் சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.2389 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் இந்த […]
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5,920 விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 2024-25 ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் […]
அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு இடையே கூட்டான பலத்தையும், ஆற்றலையும் உருவாக்குவதற்காகவும் டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமேசான் நெட்வொர்க் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை ஐசிஏஆர் வழங்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்த உதவும். அமேசான் ஃபிரஷ் உள்ளிட்டவற்றின் […]
2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் கீழ்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.4,000லிருந்து ரூ.6,377ஆக […]
தமிழ்நாடு அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை உள்ளிட்ட 13 அரசு துறைகளின் திட்டங்களில் விவசாயிகள் பயன்பெபறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக GRAINS என்ற வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெறமுடியும். விவசாயிகள் ஒவ்வொரு முறையும் அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்பிக்க வேண்டியதில்லை. […]
நாமக்கல் மாவட்ட மே 2023-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் ஆடு பொருள் விவரங்கள்,வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் […]