கறுப்புப் பட்டியலுக்கான ‘லூஸ் ஃபாஸ்டேக்’ குறித்து புகார் அளிக்கும் செயல்முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வலுப்படுத்துகிறது. இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுங்கச்சாவடி செயல்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும், ‘வாகனங்களில் ஒட்டப்படாமல் தனியாக கைவசம் வைத்துள்ள ஃபாஸ்டேக் வில்லைகள்’ குறித்து புகார் அளித்து, அவற்றைக் கறுப்புப் பட்டியலில் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் […]

ஆகஸ்ட் 15, 2025 அன்று தொடங்கப்படும் FASTag வருடாந்திர பாஸ், நெடுஞ்சாலை பயணத்தை மிகவும் மலிவு விலையிலும் தொந்தரவு இல்லாததாகவும் மாற்றும் மத்திய அரசின் ஒரு முயற்சியாகும்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த இந்த திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) செயல்படுத்த உள்ளது. இந்த ப்ரீபெய்டு டோல் திட்டம், தனியார் வாகன உரிமையாளர்கள் ரூ. 3,000 என்ற நிலையான கட்டணத்தில் 200 கட்டணமில்லா பயணங்களைப் பெற […]

சுங்கச்சாவடிகளில் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையில் மத்திய அரசு Fastag முறையை அறிமுகம் செய்தது. இதனால், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பேடிஎம் வாலட்டில் பணம் இருந்தால் அல்லது பாஸ்டேக் அக்கவுண்டில் பணம் இருந்தால் உடனடியாக ஆன்லைனில் செலுத்தலாம். இதுவரை நீங்கள் உங்கள் வாகனத்தில் பாஸ்டேக் பொருத்தாமல் இருந்தால், பேடிஎம் மூலம் எளிமையாக பேடிஎம் அக்கவுண்டை நிறுவி விடலாம். PayTm மூலம் FasTag ஓபன் செய்வது […]

நாட்டில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான வரி வசூல் முறையை கொண்டு வர மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.. சிஐஐ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நிதின் கட்கரி, நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக அடுத்த 6 மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் […]

நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்குப் பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கவரி வசூலிப்பு முறை உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த 6 மாதங்களில் இந்த புதிய தொழில்நுட்பம் நடைமுறை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணித்த சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், வாகனங்களை நிறுத்தாமல் […]

கடந்த சில ஆண்டுகளாக பாஸ்ட்டாக் மூலம் மின்னணு சுங்கச்சாவடி வசூல் நிலையான வளர்ச்சியை கண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட பாஸ்ட்டாக் மூலம் மொத்த சுங்க வசூல் ரூ.50,855 கோடியாக இருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் ரூ.34,778 கோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 46 சதவீதம் அதிகமாகும்.2022 டிசம்பர் மாதத்தில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டாக் மூலம் வசூலான தினசரி சராசரி ரூ.134.44 கோடியாகும். டிசம்பர் […]