fbpx

Girish Gopalakrishnan: இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 16 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில் போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் புகார் மனு அளித்துள்ளார். …

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி …

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் டிசம்பர் 23ம் தேதி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் ஆண் நண்பரை விரட்டி விட்டு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனில் எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக …

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், தனது சமீபத்திய அறிவிப்பில், நகரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதித்து ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தூரில் பிச்சை எடுப்பதற்கு எதிரான …

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்ட ஆட்சியர், யாசகர்கள் இல்லாத நகரத்தை உருவாக்க ஜனவரி 1 முதல் புதிய முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்தூர் நகரில் ஜனவரி 1 முதல் யாசகர்களுக்கு யாராவது யாசகம் செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தூர் …

தேர்தல் பத்திரத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி நிறுவனங்களிடம் பணம் பறித்ததாக கூறப்படும் வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது திலக் நகர் போலீஸார் சனிக்கிழமை முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறி அதில் சீர்திருத்தம் …

மக்களவை எதிர்க்கட்சி தலைவர்ராகுல் காந்தியை நாடாளுமன் றத்திலேயே கன்னத்தில் அறைய வேண்டும் என்று பேசிய கர்நாடக பாஜக எம்எல்ஏ பாரத் ஷெட்டி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

BJP MLA: ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைய வேண்டும் என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. பாரத் ஷெட்டி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மக்களவையில் கடந்த …

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாரான விராட் கோலி, களத்தில் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, வெற்றிகரமான தொழிலதிபரும் கூட. விராட் கோலிக்கு சொந்தமான ஒன் 8 கம்யூன் பப் டெல்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் இருக்கிறது. தற்போது கர்நாடக தலைநகர் பெங்களூரில் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் …

குஜராத் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர், நெடுஞ்சாலையில் தன் மனைவியோடு செல்லும் போது, குறுக்கே வந்த தெரு நாயின் மீது காரை மோதாமல் இருக்க, பக்கவாட்டில் உள்ள தடுப்புகளில் மோதினார். அதில் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். ஆகையால் அந்த ஆசிரியர், தன் மீதே காவல் துறையில் புகார் அளித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் …

உத்திரபிரதேசத்தில் மணப்பெண் ஒருவர், தனது திருமணத்திற்காக ஒப்பனை செய்ய பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனை அறியாது அப்பாவியாய் ஊர்வலம் சென்று கொண்டிருந்த மணமகன், உண்மையை அறிந்து, தனது உறவினர்களுடன் மனமுடைந்து வீடு திரும்பினார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரின் சௌபேபூர் கிராமத்தில், திருமண …