ஜெர்மனி தனது குடியேற்ற அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது திறமையான நிபுணர்கள், சர்வதேச பட்டதாரிகள் மற்றும் தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதை எளிதாகவும் மலிவாகவும் ஆக்குகிறது. நிரந்தர அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான செலவு – நிரந்தர குடியுரிமை அனுமதி என்றும் அழைக்கப்படுகிறது.. இப்போது ரூ.11,500 (சுமார் €113) ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, இது இந்திய குடிமக்கள் மற்றும் பிற வெளிநாட்டினருக்கு கணிசமாக அணுகக்கூடியதாக ஆக்குகிறது. ஜெர்மனியில் நிரந்தர வதிவிட […]

முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி. மக்களை ஏமாற்றும் முயற்சிகள் பலிக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் போது, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். முதலீடுகளின் அளவு மிகக் குறைவு என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை ஆகும். இயல்பாக […]

ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு..? என பாஜக மாநில தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் […]

ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் செல்வது சுற்றுலா பயணம் என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு திரட்டுவதற்கான 922 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10% கூட நடைமுறைக்கு […]

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று காலை புறப்படுகிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் செல்கிறார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்கின்றனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு […]

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளால் ஏற்பட்ட அழிவால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், இப்போது இந்தியாவை எதிர்கொள்ள புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை, S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தி 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தி, 4 முக்கிய ரேடார் மையங்களை அழித்தது […]